நிஸான் கார்கள் லிஜெண்டுகளுக்கே பிடிக்கும் என்று சொல்லலாம். வருடத்துக்கு இத்தனை கார்கள் என டார்கெட் வைத்து அறிமுகப்படுத்து நிஸானின் புதிய அம்சங்கள் என்ன என்று தெரிந்துகொள்வதற்கான ஆட்கள் எல்லாம் கார் பிரியர்களில் முதன்மையானவர்கள். 

 

இந்தமுறை அந்த பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் வந்துள்ளது நிஸான் நிறுவனத்தின் புதிய மகிழுந்து (சிறு ஃபேமிலி கார்களை தமிழில் இப்படிச் சொல்வது வழக்கம்).  2018-ம் ஆண்டின் இடைக்கால அறிமுகமாக தற்போது நிஸான் அறிமுகப்படுத்தியுள்ள ’நிஸான் மைக்ரா’ கார்கள்தான் இப்போது வாகன உலகத்தில் ’டாப் ட்ரெண்டிங் டாக்’! 

 

இண்டஸ்ட்ரிக்குள் இறக்கிவிடப்பட்ட சில நாட்களிலேயே ’ஸ்ட்ரீட் ஸ்மார்ட் சென்சேஷன் 2018’ பட்டத்தை தட்டிச் சென்ற நிஸான் பல நாள் மார்க்கெட்டில் ‘நிப்பான்’ என்கின்றனர் இதனை உபயோகித்தவர்கள். 

 

Xtronic CVT Automatic போன்ற அதி நவீன சிறப்பம்சங்களுடன், ஆட்டோமேட்டிக் சென்சார் கொண்ட மழை வெய்ப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின்பக்க கண்காணிப்பு கேமிரா போன்றவற்றுடன் கூடிய இதன் அசத்தலான ’வீ ‘ வடிவ கிரில் முகப்பும், ஸ்போர்ட்ஸ் லுக்கும் அமேசிங். 

 

கார்கோவில் கவரும் ஹேட்ச்பேக், 50 நிஸான் கார் சேவைகளுடன் தொடர்புகொள்ள உதவும் நிஸான் கனெக்ட் ஆப், வீடியோ மூலம் வழிகாட்டும் ஆட்டோ நேவிகேஷன் வசதிக்கு 6.2" இன்ச் கொண்ட தொடுதிரை, ஓட்டுநருக்கு கம்ஃபோர்ட் சீட் என  இதன் அற்புதமான அம்சங்களுக்காகவே இதனை இதன் அறிமுக விலையான ரூ. 5 லட்சம் கொடுத்து வாங்கத் தயார் என்கின்றனர் வாகன பிரியர்கள். 

 

BY SIVA SANKAR | AUG 17, 2018 1:02 PM #NISSAN #NISSANMICRA #SMARTSTREETSENSATION2018 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS