நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஊள்ளது பெந்தட்டி. வனப்பகுதியான இங்கு இருக்கும் சாலைகளை விலங்குகள் கடப்பது ஒன்றும் அரிதான விஷயம் அல்ல என்றாலும் அவற்றைக் காண்பது என்பதோ அரிதுதான்.

 

இப்படித்தான் இந்த சாலையைக் கடந்து இரை தேடி வந்தன இரண்டு கரடிகள். அதில் ஒன்று தாய்க் கரடி. மற்றொன்று குட்டிக் கரடி. குட்டிக் கரடி உணவு தேடியபடி ஒரு வீட்டுப்பக்கம் சென்றதும் அதன் தலை அந்த வீட்டின் முன் இருந்த இரும்பு கேட்டின் இடையில் மாட்டிக்கொண்டது. இதை பார்த்த தாய்க்கரடி செய்வதறியாது தவித்த காட்சியை ஊரே கண்டு பரிதவித்தது.

 

ஆனாலும் எவ்வளவோ முயன்றும் குட்டிக்கரடியால் தன் தலையை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டது. தாய்க்கரடி இருந்ததால் பொதுமக்கள் யாரும் அருகில் நெருங்க முடியவில்லை. இந்த விஷயம் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் வனத் துறையினர் அந்த தாய்க்கரடியை முதலில் தீப்பந்தம் வைத்து விரட்டினர்.

 

இறுக்கமான முகத்துடன், போக மனமில்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் தன் குட்டியை பார்த்தபடியே மனிதர்களின் அதட்டலுக்கு பயந்து உள்சென்றது கரடி. இருப்பினும் இரும்பு கேட்டிடைடே மாட்டி பரிதவித்த கரடிக்குட்டியை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, போராடி கேட்டின் இரும்புக் கம்பிகளை அறுத்தெடுத்துவிட்டு, குட்டிக்கரடியை காப்பாற்றி பாதுகாப்பாக சென்று வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டுவந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

BY SIVA SANKAR | AUG 25, 2018 5:01 PM #CUBBEAR #NILGIRISFOREST #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS