தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாகப் பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.இப்போராட்டத்தின் முடிவில்  ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

 

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிபந்தனை களுக்கு உட்பட்டு தனது நிர்வாகப் பணியை மேற்கொள்ளலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ம் தேதி அனுமதி அளித்தது.

 

இந்த விவகாரத்தை தமிழக அரசு திறம்பட கையாளவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன.இதுதொடர்பாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி, தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதை யடுத்து தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இதுகுறித்து கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனது நிர்வாகப் பணியை மட்டும் மேற்கொள்ளலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியிருப்பது சட்டத் துக்கு புறம்பானது என்பதால், அந்த உத்தரவை எதிர்த்து தற் போது தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

அதில், இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே மூடப்பட்ட அந்த ஆலையை ஒருபோதும் திறக்க அனுமதிக்க முடியாது.

 

எனவே இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியுள்ளோம். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தி்ல் விசாரணைக்கு வரவுள்ளது என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS