ஹனிமூன் போன இடத்துல இப்படியா செய்றது?.. தம்பதியை வறுத்தெடுக்கும் உறவினர்கள்
Home > தமிழ் newsதேனிலவுக்கு இலங்கை சென்ற பிரிட்டன் தம்பதியர் செய்த காரியம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மார்க் லீ(35)-ஜினா லையன்ஸ்(33) தம்பதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேனிலவுக்கு இலங்கை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அழகு அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
இந்தநிலையில் ஒருநாள் அவர்கள் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது, அந்த விடுதியின் ஒத்திகைக்காலம் முடிவடையும் தகவல் இவர்களுக்குத் தெரியவந்துள்ளது.தொடர்ந்து மறுநாள் காலை இருவரும் உள்ளூரை சேர்ந்த இருவருடன் சென்று விடுதி உரிமையாளருடன் பேரம் பேசியுள்ளனர்.
நீண்ட பேரத்துக்குப் பிறகு, 3 வருட குத்தகைக்கு 30,000 பவுண்ட் என உரிமையாளரிடம் ஒத்துக்கொண்டனர். இதையடுத்து 15,000 பவுண்ட் தொகையை முதல்கட்டமாக வழங்குவதாகவும், மீதித் தொகையை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒத்திகைக்கான தொகை மற்றும் புனரமைப்பு செலவுகள் இருவரின் கையை மீறிச்சென்றுவிட்டது. அதே நேரம் ஜினாவும் வயிற்றில் குழந்தையை சுமக்க ஆரம்பிக்க, அந்த நேரத்தில் தான் தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என தம்பதியர் உணர ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஜினா ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,'' மதுபோதையில் அது ஒரு சிறந்த முடிவாக இருந்தது.அதன் பின்னர் நான் கர்ப்பம் அடைந்து விட்டேன். தொடர்ந்து சட்ட சிக்கல்கள், புனரமைப்பு செலவு ஆகியவை எங்களது கையை மீறிச்சென்று விட்டது. தற்போது நாங்கள் ஒரு சிறிய பிளாட்டில் வசித்து வருகிறோம்.
எங்களது உறவினர்கள், நண்பர்கள் உங்களைப்போன்ற ஒரு முட்டாளை நாங்கள் பார்த்ததில்லை என கூறுகின்றனர்.திருமணத்துக்கு நாங்கள் நிறைய செலவு செய்திருந்தோம். இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்கப்போகிறது,'' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Newly-Married Couple Books Entire Train For Honeymoon Trip To Nilgiri Hills
- Sri Lanka suspends yet another cricketer
- நான் என்ன பைத்தியமா?..குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட 'கூல்' தோனி!
- Sri Lanka admits to violating ICC code of conduct
- Sri Lanka skipper Dinesh Chandimal charged with ball-tampering
- பால் டேம்பரிங் புகாரால்...களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்
- Popular cricketer's father murdered
- Wild elephant electrocuted while trying to enter farmland
- Nidahas Trophy: Sri Lanka vs Bangladesh Results
- "I strongly condemn the recent acts" - Former Sri Lankan cricketers