ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த நியூஸி வீரர்கள்!

Home > தமிழ் news
By |

நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுக்கப்பட்டுள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. நியூசிலாந்தின் வடக்கு மாவட்டங்கள் அணி மற்றும் மத்திய மாவட்டங்கள் அணிகளுக்கு இடையேயான  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஆகிய பேட்ஸ்மேன்கள் இணைந்து ஆடினர். 

 

இதில் எதிரணியான செண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியை சேர்ந்த வில்லெம் லூடிக் வீசிய பந்துவீச்சை எதிர்கொண்டு ஒரே ஓவரில் 4, 6nb, 6nb, 6, 1, 6, 6, 6 என கார்டரும் ஹாம்ப்டனும் ரன்களை விளாசி 43 ரன்கள் (இரண்டு No Ball-களைச் சேர்த்து) எடுத்து, இதற்கு முன் ஒரே ஓவரில் ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை விளாசி (ஒரு No Ball) 39 ரன்கள் குவிக்கப்பட்ட சாதனையை இருவரும் முறியடித்துள்ளனர்.

 

இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் மட்டும் எடுத்திருந்த எதிரணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

NEW ZEALAND BATSMEN, 43RUNSINAOVER, WORLDRECORD, VIRAL, CRICKET

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS