‘எதுக்குடா இந்த #ஹேஷ்டேக் ட்ரெண்டிங்ல இருக்கு.. சொல்லுங்கடா?’.. குழப்பத்தில் ட்விட்டர்வாசிகள்!

Home > தமிழ் news
By |

இணையதளத்தில் நேற்றைய தினத்தில் இருந்து ஒரு மிக முக்கியமான ஹேஷ்டேக் தமிழில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆனால் அந்த ஹேஷ்டேக் ஏன் ட்ரெண்டாகி இருக்கிறது என்று புரியாமல் இணையவாசிகள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் ட்ரெண்டாகி ஒரு மாற்றத்தை உருவாக்கிய ஹேஷ்டேக் #MeToo. அதன் பிறகு மிக அண்மையில் #TNWelcomesModi, #GOBackModi2 போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

ஆனால் தற்போது #நாங்க_சுயமா சிந்திப்போம் என்கிற ஹேஷ்டேக் தமிழில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த ஹேஷ்டேகின் கீழ் பதிவிடப்பட்டுள்ள மீம்ஸ்களை பார்க்கும்போது, பெண் ஒருவர் திருமணத்துக்கு பிறகு, கணவரின் பேச்சை எதற்கு கேட்க வேண்டும். அம்மா, அப்பா பேச்சைக் கேட்டு நடந்துகொண்டாலே போதும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு, ‘திருமணத்துக்கு பிறகும் மனைவி கணவரின் பேச்சை எடுத்துக்கொள்ளாமல், அம்மா, அப்பா பேச்சை கேட்டு நடப்பதால்தான் பல குடும்பங்களில் பிரச்சனை’ என்பன போன்ற பதில்களை சில ஆண்கள் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த அந்த பெண், ‘அப்பா, அம்மா நீ படிச்சது போதும், கை காட்டற பையனை கட்டிக்கணும் சொல்றாங்க. புருஷன் நான் அடிச்சாலும் வாங்கிட்டு அடங்கி இருக்கணும் சொல்றான். அவங்க பேச்சை கேட்கணுமா, இல்லை இவனை மதிக்கணுமா. எது சரின்னு யோசிச்சு அதன்படி நடக்கறதை சரி’ எனபதையே, தான் சொல்ல வந்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தானும் தன் அன்புக்குரியவரும் 15 வருடங்களாக  உறவில் இருப்பதாகவும், இதுவரை ஒருநாளும் தான் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கவோ, தனக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கவோ அவர் கேட்டதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும், ‘தான் எழுதிய வார்த்தைகள் சரியாக இல்லாததால், வேற மாதிரி புரிந்துகொள்ளப்பட்டது. அது யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்கவும்’ என்று கேட்டுக்கொண்டவர், ‘ஆனால் #நாங்க_சுயமா சிந்திப்போம் ஒரு நல்ல Tag’ என்று பதிவிட்டுள்ளார்.

நாங்க_சுயமாசிந்திப்போம், NANGASUYAMASINTHIPOM, KURINJIMALAR, WOMEN, FEMINISM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS