ஐபோனை கிராஷ் செய்வதற்காக ஒரு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மொபைல் போன் உலகில் தற்போது பேசப்பட்டுவரும் ஹாட் டாப்பிக்.

 

டெக்னிக்கல் மொழியில் சொல்லவேண்டும் என்றால் சிறிய ‘பக்’ என்று சொல்லப்படும் இந்த மென்பொருளுக்கான லிங்க் மட்டும் கிராஷ் செய்யப்படவேண்டிய மொபைலுக்கு அனுப்பப் பட்டால், அதனை க்ளிக் செய்தலே அந்த குறிப்பிட்ட மொபைல் க்ராஷ் ஆவதற்கு போதுமானது.

 

மூலக்குறிப்பு எனப்படும் இந்த SourceCode-க்கான மொழியில் CSS மற்றும் HTML என்கிற வரிகளை மட்டும் சேர்த்ததால் இப்படி ஆவதாக இதனை கண்டறிந்த மென்பொருளாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த லிங்கினை தொடும்போது, முதலில் டிஃபால்ட் பிரவுசர் செயலிழந்த ‘நாட் ரெஸ்பாண்டிங்’ஆகி, உடனே செல்போன் ரீஸ்டார்ட் ஆவதன் மூலமாக ஐபோனின் இயங்குதளம் க்ராஷ் ஆகி ஒட்டுமொத்தமாக போனும் போனில் உள்ள அப்ளிகேஷன்களும் க்ராஷ் ஆகின்றன.

BY SIVA SANKAR | SEP 19, 2018 4:45 PM #TECHIE #SMARTPHONE #TECHNOLOGY #IOS #IPHONE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS