
ப்ளூவேல்ஸ், கீகீ சேலஞ்ச், மோமோ சேலஞ்ச் போன்ற ஆபத்து நிறைந்த சேலஞ்சுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வித்தியாசமான முறையில் ஸ்னூட் சேலஞ்ச் ட்ரெண்டாகி வருகிறது.
மூக்கு சவால் எனப்படும் இந்த ஸ்னூட் சேலஞ்ச், கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது. இதன்படி கைகளை வட்டவடிவமாகவே, முக்கோணமாகவோ வைத்துக்கொண்டு அதனுள் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் மூக்கை நுழைக்க வேண்டும் என்பதே இந்த சவால்.
பலரும் கைகளுக்கு பதிலாக பிரட் போன்றவற்றையும் பயன்படுத்தி நாய்க்குட்டி, பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் இந்த சவாலை முயற்சித்து அந்த வீடியோவை இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் யாரேனும் ஒரு நடிகை இதையும் முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கலாம்!
BY SIVA SANKAR | SEP 1, 2018 1:46 PM #SNOOTCHALLENGE #PETS #DOGS #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS