ஏடிஎம்களின் வரவுக்கு பின்னர் வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது என்பது குறைந்துள்ளது. குறிப்பாக வங்கிகளே, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வங்கியின் அலுவல் பணிகளுக்கு தொந்தரவு தராமல் ஏடிஎம்களுக்குச் சென்று பணம் எடுத்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமானது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஏடிஎம் மிஷின்களில் பணத்தை நிரப்பி வைப்பது பற்றிய பதறவைக்கும் அறிவிப்பு ஒன்றை கூறியிருகிறது.
அதன்படி, இரவு நேரங்களில்தான் மக்கள் கூட்டம் இல்லாமல், ஏடிஎம்கள் ஓரளவிற்கு நெருக்கடி இன்றி இருக்கும் என்பதால் அலுவலர்கள் அந்த நேரத்தில் சென்றுதான் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பி வைப்பார்கள். ஆனால் சில நாட்களாக சினிமா படங்களில் வருவது போலவே, ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்காக செல்லும் வாகனங்களை குறிவைத்து, கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இரவு நேரங்களில் பாதுகாப்பு உத்தரவில்லாமல் நடக்கும் இந்த மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான அலுவல் நேரமானது ஒரு குறிப்பிட்ட நேரமாக மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நகர்ப்புறங்களைத் தவிர்த்து, உள் நகரங்களில் இரவு 9 மணி வரைக்கும், குக்கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம்கள் வங்கியின் அலுவல் நேரம் வரையிலும் மட்டுமே இயங்கும் என்றும் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே ஏடிஎம்களில் பணம் நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களே இந்த பணம் நிரப்பும் பொறுப்பை ஏற்றுள்ளதால் அவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி, அதில் மேற்கண்ட எல்லாமும் அடுத்த ஆண்டு 2019 பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 2022ஆம் ஆண்டு முதல் பெட்ரோலுக்கான மாற்றுத் தீர்வு ... பிரதமர் மோடி!
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தெர்மல் பேட்டரி கார்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- ’இந்தியர்கள் உட்பட’.. ஒன்றரை லட்சம் மக்களை வெளியேறச் சொல்லும் மலேசியா!
- 'மன்னிச்சிடுங்கப்பா'.. ஆதார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்!
- 'அப்படித்தான் சூப்பர் மாமா'..அஸ்வினை தட்டிக்கொடுத்த தினேஷ் கார்த்திக்.. வைரல் வீடியோ!
- Chennai bank refuses to return gold to customer for owing a balance of Re 1
- பெண்களுக்கு ஆபத்தான 'டாப் 10' நாடுகள்.. இந்தியாவின் இடம் இதுதான்!
- அமெரிக்க 'ஜெனரல் மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரியாக... 'சென்னை' பெண் நியமனம்!
- Four teams formed to nab Mannargudi Bank robbers