அசத்தலான முறையில் அறிமுகமாகவுள்ள நோக்கியா எச்.எம்.டி குளோபல் நெக்ஸ்ட் அல்லது சுருக்கமாக நோக்கியா 9-ன்  புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஸ்போர்ட்டியான லுக், பின் பக்கம் 5 ஃப்ளாஷ் கேமராக்களுடன் இருப்பது போல் இப்படம் அமைந்திருக்கிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக செல்போன் வெளியிடப் படாததால், இதன் உண்மைத் தன்மையை அறிவது சிரமமாக இருப்பதாக நோக்கியா பிரியர்கள் கருதுகின்றனர்.
 

ஆனால் முன்னதாக 3 கேமராக்கள், 7 கேமராக்கள் என்றெல்லாம் நோக்கியா 9-ல் உள்ளதாக வதந்திகள்வெளியாகின. எனினும் நோக்கியா 9-ன் அலுவல் ரீதியிலான தகவல்களின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் எனப்படும் நவீன புராசசரும், 8 ஜிபி ரேமும் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்ட இந்த போன் 6.1 இன்ச் தொடுதிரையும் கொண்டிருக்கும் என முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில் செல்போன் சந்தையை குழப்பியிருக்கும் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறிய, நோக்கியா விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY SIVA SANKAR | SEP 11, 2018 11:10 AM #SMARTPHONE #NOKIA9 #NOKIAHMDGLOBALNXT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS