கேரள வெள்ளத்தின் போது முப்படையினர்,தேசிய பேரிடர் மீட்டு குழுவினர் மற்றும் காவல் துறையினர் என அரசுத்துறையை சேர்ந்த பலரும் மீட்பு பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டனர்.இவர்களுக்கு பக்கபலமாக இருந்து பல மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டதில் கேரள மீனவர்களின் பங்கு மிகப்பெரியதாகும்.கடும் வெள்ளத்தின் பொது மீனவர்கள் தக்க சமயத்தில் தங்களின் படகுகளை கொண்டுவந்து உதவியதால் பல மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

 

மீட்பு பணிகளில் ஈடுப்பட்ட மீனவர்களை கேரளத்து ராணுவம் என பெருமைப்படுத்தினார் கேரள முதல்வர்.அவர்களுக்கு கேரள அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதை கூட வேண்டாம் என மறுத்துவிட்டார்கள்.இந்நிலையில் வெள்ளத்தின்போது நடந்த  மீட்புப்பணியில் முதுகை படிக்கட்டாக்கி,பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவர் ஜெய்ஷாலுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32), கேரள வெள்ளத்தின் போது மீட்பு படையினருக்கு இணையாக மீட்பு பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணியின்போது,  ஜெய்ஷால் தன் முதுகை படிக்கட்டாக்கிக்கொள்ள, பெண்கள் அதில் ஏறி படகில் அமர்ந்த சம்பவம் இந்தியா முழுவதும் வைராலகி பலரது பாராட்டை பெற்றது. ஜெய்ஷால் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினருடன், வெங்காரா பகுதியில் மட்டும் 17 குடும்பத்தைச் சேர்ந்த 250 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

 

இந்நிலையில் இவரின் மீட்புப் பணியைப் பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக மகிந்ரா நிறுவனத்தின் புதிய காரான மாரஸோ வழங்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிந்ரா நிறுவனத்தின் டீலர்  சார்பில் இந்த கார் வழங்கப்பட்டுள்ளது.கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமச்சந்திரன், கார் சாவியை அவரிடத்தில் வழங்கினார். தன்னுடைய தன்னலமற்ற செயலால் கேரள மக்களின் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் ஜெய்ஷால்.

BY JENO | SEP 10, 2018 2:48 PM #KERALAFLOOD #KERALA #JAISAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS