உச்சநீதிமன்றத்தின் திடீர் உத்தரவை அடுத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான மூன்றாவது நபர் இன்சூரன்ஸ் தொகை இன்று முதல் அதிகரிக்கிறது.
’மோட்டார் வாகன சட்டப்படி, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் (காப்பீடு) கட்டாயம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இன்று (செப்டம்பர் 1-ந் தேதி) முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம்’ என்று கூறப்பட்டுள்ளதோடு இந்த இன்சூரன்ஸ் கார்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் (இர்டாய்) இது தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிப்பட்டுள்ளதாவது:
கார்களுக்கு..
1. 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286.
2. 1,000 முதல் 1,500 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534.
3. 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305.
இருசக்கர வாகனங்களுக்கு..
1. என்ஜின் திறன் 75 சி.சி.க்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045.
2. 75 முதல் 150 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.3,285.
3. 150 முதல் 350 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,453.
4. 350 சி.சி.க் கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034.
ஆனால் இந்த நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டத்தின் காரணமாக பொதுவாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும் என்றும் ஆனால் 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்கள் மற்றும் 75 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
OTHER NEWS SHOTS