ஜப்பானை சேர்ந்த மெழுகு சிற்பக் கலைஞர் மிடோரி ஹயாஷி. 'டால் ஆர்டிஸ்ட்' என்று அழைக்கப்படும் இவர் குழந்தைகளுக்கான பல்வேறு விதமான பொம்மைகளை உருவாக்குவதில் வல்லவர். அவை வெறுமனே குழந்தைகளை குதூகலப்படுத்தும் பொம்மைகளாக மட்டுமல்லாமல், குழந்தைகளை பயமுறுத்தச் செய்யும் கோரமான பொம்மைகளாகவும் இருக்கின்றன. இவர் இதனை ஒரு வித்தியாசமான முயற்சியாக சில ஆண்டுகளாக செய்து வருகிறார். இதில் அதிர்ச்சி என்னவென்றால், இவர் உருவாக்கிய இந்த பொம்மைகளின் படங்களை வைத்து குழந்தைகளை மிரட்டி, கொன்று குவிக்க தொடங்கியுள்ளது, ஒரு புதிய ஆபத்தான விளையாட்டு. இதனை மோமோ சேலஞ்ச் என்று குறிப்பிடுகிறார்கள்.

 

சில நாட்களுக்கு முன்பாக இளைஞர்களை அச்சுறுத்தி, அவர்களின் மனதோடு விளையாடி அவர்களை தற்கொலைக்கு தூண்டிய புளூவேல் என்னும் ஆபத்தான சைக்கோ விளையாட்டு பற்றியும், அண்மையில் ஓடும் காரில் இருந்தும், ரயிலில் இருந்தும் எகிறிக் குதிக்கும் ஆபத்தான கீகீ சேலஞ்ச் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருந்தோம்.

 

ஆனால் இந்த மோமோ சேலஞ்சின் வரலாறு வேறு. இருப்பினும் அதே புளூவேல் விளையாட்டை போலவே குழந்தைகளை மிரட்டும் வகையிலான பல புகைப்படங்களை அனுப்பி அவர்களை அச்சுறுத்தி, அவர்களுக்கு புதிய டாஸ்க்குகளைக் கொடுத்து சன்னமாக தற்கொலை வரை கொண்டு செல்லும் மிக அபாயமான விளையாட்டாக ஜப்பான், மெக்சிக,  கொலம்பியா போன்ற நாடுகளில் பரவி வருகிறது இந்த மோமோ சேலஞ்ச். இதில் பயன்படுத்தப்படும் அந்த கோரமான பொம்மைப் படங்கள் மேற்கூறிய வடிவமைப்புக் கலைஞர் மிடோரி ஹியாஷ் செய்தவை. ஆனால் இதுபற்றி போலீசார் அவரை விசாரித்தபோது அவருக்கும் இந்த விளையாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிய வந்தது.

 

தெற்காசிய நாடுகளுக்கு இன்னும் அறிமுகமாகாத இந்த விளையாட்டு, வாட்ஸ் ஆப் எண் மூலம்,  வளரிளம் பெண் குழந்தைகளை குறி வைப்பதால் இந்த விளையாட்டுக்கான நாடு-எல்லைகள் என்று எதுவுமில்லை. முன்னதாக அர்ஜென்டினாவை சேர்ந்த 12 வயது சிறுமி இந்த விளையாட்டை முயற்சித்து உயிரிழந்துள்ள தகவல் பரவியது. இதனையடுத்து இந்தியா போன்ற நாடுகளில் இவ்விளையாட்டு பரவும் முன்பாகவே தடுக்கும் முனைப்பில் இந்த மோமோ சேலஞ்ச் பற்றிய  விழிப்புணர்வு தகவல்கள் பகிரப்படுவதோடு காவல்துறை மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது கவனமாக இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் பலர் எச்சரிக்கையும் செய்து வருகின்றனர்.

BY SIVA SANKAR | AUG 11, 2018 4:06 PM #KIKICHALLENGE #BLUEWHALECHALLENGE #MOMOCHALLENGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS