வங்கக்கடலில் வலுப்பெறும் 'புதிய காற்றழுத்த' தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா?

Home > தமிழ் news
By |

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு இன்று(10.12.18) பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

 

இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், தென்கிழக்கு வங்கக்கடல்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மீனவர்கள் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் வறண்ட வானிலை காணப்படும்" என்றார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS