'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்!

Home > தமிழ் news
By |

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.முதல் 18 ரன்களை சேர்ப்பதற்குள் டாப் ஆர்டரை இழந்தது.இதனால் இந்திய அணி 150 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் பாண்ட்யா, விஜய் ஷங்கர் மற்றும் ராயுடுவின் பொறுப்பான ஆட்டத்தால் 250 ரன்களை கடந்தது.இதனையடுத்து  இந்திய அணி 252 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தது.இருப்பினும் வெற்றி என்பது இரு அணிக்கும் சமமாகவே இருந்தது.இந்நிலையில் சீராக விளையாடி வந்த நீஷம் தனது கவனக்குறைவால் செய்த சிறு தவறை தனக்கு சாதகமாக்கிய தோனி அவரை ரன் அவுட் செய்தார்.இதன் பின்னா் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடா்ந்து சமயோஜிதமாக செயல்பட்டு தோனி செய்த ரன் அவுட் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனையடுத்து யோகோ ஓனோ என்ற பிரபல ட்விட்டர் வாசி “வாழ்வில் பிரகாசமாகவும், நலமாகவும் வாழ ஆலோசனை கூறுங்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதற்கு பதிலளித்துள்ள சா்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி), “மகேந்திர சிங் தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருந்தால் கிரீசை விட்டு தாண்ட வேண்டாம்” என்று அறிவுரை வழங்கியுள்ளது.தற்போது ஐசிசி பதிவிட்டுள்ள ட்விட்டை தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS