திரைப்படங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்க காலத்தில் டென்ட் கொட்டாய்களிலும் பிற்காலத்தில் டிஜிட்டல் திரையரங்குகளிலும், அதன் பிறகு தற்போது டிஜிட்டல் இணையதளங்களில் திரைப்படங்களை திரையிட தொடங்கியுள்ளன. அவற்றில் அமேசான் போன்ற நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டிக்கு நடுவில் காலூன்றி நின்று கொண்டிருக்கும் டிஜிட்டல் இணையதள மீடியா ஹவுஸ் நெட்பிளிக்ஸ்.

 

தமிழ் படங்கள் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு திரைப்படங்களை வாங்கி டிஜிட்டல் தளத்தில் விநியோகித்து வரும் முக்கியமான நிறுவனமான நெட்பிளிக்ஸ், சில திரைப்படங்கள் நேரடியாக தனது டிஜிட்டல் தளத்தின் மூலமாகவே வெளியிடுவதும் உண்டு.

 

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதன்மை பொருளாதார இயக்குனர் டேவிட் வெல்ஸ் தன் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். 47 வயதான டேவிட் வெல்ஸ் நெட்பிளிக்ஸின் வளர்ச்சியில் பொருளாதார ரீதியாக மிக முக்கியமான பங்காற்றியவர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளை கரைத்துக்குடித்தவர்.

 

ஆனால் மனிதர்களின் அக வாழ்க்கையை பற்றிய புரிதல் வந்ததற்கு பிறகு பலதரப்பட்ட மனிதர்களோடு பேசி பழகி புரிந்து அவர்களோடு இணைந்து ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முடிவு செய்தவர், 8 ஆண்டுகள் பணிபுரிந்த இந்த நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். எனினும் புதிய பொருளாதார இயக்குனர், பணியமர்த்தப்படும் வரை வேல்ஸ் இந்த பணியில் தொடர்ந்து நீடித்திருப்பார்.

BY SIVA SANKAR | AUG 17, 2018 6:03 PM #TECHIE #NETFLIX #DIGITALTRENDS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS