NEET 2019: தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள்.. 2-லும் முதல் இடத்தில் எந்த மாநிலம்?
Home > தமிழ் newsமுதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் பரவலாக நடத்தப்பட்ட பிறகு தற்போது நீட் தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதுமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வை முறைப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல், மதிப்பெண்கள் அடிப்படையில் இருப்பதால், அந்த தேர்வினை சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக எழுதிவிடுகிறார்கள் என்றும், தமிழ் வழி, சமச்சீர் கல்வி மற்றும் மாநில பாடத்திட்டங்களை பயிலும் மாணவர்கள் எழுதுவதற்கு சிரமப்படுகிறார்கள் என்றும் தொடக்கத்தில் தமிழகர்களால் எதிர்க்கப்பட்டது.
இந்த நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த அரியலூர் அனிதாவின் மரணம் பெரும் அதிர்வை சில மாதங்களுக்கு உண்டாக்கியது. இதனை அடுத்து நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதோடு, அதற்கான பயிற்சிப் பள்ளிகளும் தமிழகத்தில் முகாமிட்டன. நீட் தேர்வை முதலில் எதிர்த்தவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவாறு தங்கள் குழந்தைகளை பயிற்சி பள்ளிகளுக்கு அனுப்பத் தொடங்கியதோடு, வேறு மாநிலத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திலேயே வைக்கச் சொல்லி போராடினர். பலர் இந்த சிக்கலின் மூல பிரச்சனையை இப்போதிலிருந்தே சமாளிப்பதற்கு, நேரடியாக குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினர்.
ஆனால் ப்ளஸ் 2 முடித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர முடியும். இதேபோல் மருத்துவ படிப்பினை பயிலும் முதுகலை மாணவர்களுக்கான நீட் தேர்வானது மருத்துவ படிப்புகளின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் வழக்கமாக நடைபெற்று வந்தது. அதில் இந்த ஆண்டு எழுதப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்வில் அதிகம் பேர் பங்குபெற்ற மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் எழுதிய நீட் தேர்வில் 11 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையிலும் தமிழ்நாடே முதல் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு!
- ‘நான் ஒண்ணும் தோற்றத்தில் அழகு குறைந்தவள் அல்ல.. வளர்ச்சி பிடிக்காதோரின் செயல் அது!’
- காதல் தோல்வியில் குடித்துவிட்டு, கலெக்டர் ஆபீஸ் வந்த நபரின் விநோத காரியம்!
- 'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்!
- தேசிய பெண்கள் கட்சியின் தமிழக ‘தலைவி’யாகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம்!
- 'தற்காலிக ஆசிரியர்களா?’.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.. ‘சம்பளம் எவ்ளோ தெரியுமா?’
- ‘அப்படியெல்லாம் திறக்கக் கூடாது’.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ‘செக்’!
- 'பசியில் வாடுபவர்கள் இருக்கும் தேசத்தில் கட்- அவுட்டுக்கு பால் ஊத்தணுமா?'.. கொந்தளித்த சீமான்!
- ‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்!
- கைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்!