நான் உயிருடன் இருக்க இந்திய கடற்படை தான் காரணம்....உயிர்பிழைத்த அபிலாஷ் உருக்கம் !

Home > தமிழ் news
By |

இந்திய கடற்படையை சேர்ந்த கமாண்டர் அபிலாஷ் டாமி.இவர் கோல்டன் க்ளோப்  எனப்படும் படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். அப்போது தெற்கு இந்திய பெருங்கடலில் வீசிய புயல் காற்றால் அவரது படகு பாதிப்புக்கு உள்ளானது. இதில் அவரது படகு கடும் சேதமடைந்தது.இந்த விபத்தின் காரணமாக கமாண்டர் டாமிக்கும் முதுகுப் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாமி, குறுஞ்செய்தி மூலம் தனது நிலைமை குறித்து தகவல் தெரிவித்தார்.

 

கன்னியாகுமரிக்கு தெற்கே ஐயாயிரத்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அவர் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை மீட்க இந்தியக் கடற்படையின் கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் சென்றன. இதுகுறித்து தகவலறிந்த பிரான்ஸும் தனது  நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் கப்பலை அவர் இருக்கும் இடத்திற்கு அனுப்பியது.ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு கப்பலானது  கமாண்டர் டாமி இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்தது.இதன் காரணாமாக  கமாண்டர் டாமியை மீட்பதற்கு முதற்கட்ட முயற்சியாக சிறிய படகு மூலம் அவருக்கான முதலதவியை அனுப்பியது ஓசிரிஸ்.

 

 

இதனையடுத்து மீட்பு பணியில் இந்திய கடற்படை சார்பில் ஒரு கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் ஒரு கப்பலும் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலும் கமாண்டர் டாமியை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

 

இதனையடுத்து பத்திரமாக மீட்கப்பட்ட டாமி ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அமைந்துள்ள தீவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரை சந்தித்த கடற்படை அதிகாரிகளிடம் பேசிய அபிலாஷ் "இந்திய கடற்படை உதவியால் தான் நான் உயிர் பிழைத்தேன்.நடு கடலில் தத்தளித்த போது எனது மனதைரியம் தான் என்னுடைய உயிரை தக்கவைத்தது" என அபிலாஷ் தெரிவித்துள்ளார்.

INDIAN NAVY, ABILASH TOMMY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS