கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலதரப்பில் இருந்தும் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதும், ராணுவ ஹெலிகாப்டர் மூலம்மீட்புப் பணிகளும் நிகழ்கின்றன.  

 

மழை காரணமாக உண்டான நிலச்சரிவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்ப்பதில் உண்டான இடர்பாடுகளால், தனி ஹெலிகாப்டர்களும், செயற்கைக் கோள்கள் உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொச்சியில் மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனாலும் விமான நிலையத்தில் இறங்காமல், கொச்சியின் கடற்படை விமான தளவாடத்தில் கமர்ஷியல் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.

 

BY SIVA SANKAR | AUG 20, 2018 1:47 PM #HEAVYRAIN #KERALAFLOOD #KERALA #KOCHIAIRPORT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS