தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் தொடுத்த மனு மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.

 

விசாரணை முடிந்தபின் தேசிய பசுமை தீர்ப்பாணையம் சற்றுமுன் தீர்ப்பு வெளியிட்டது. அதில், ''நிர்வாக அலுவல்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும், உற்பத்தி,பராமரிப்பு பணி உள்ளிட்ட வேறு எந்த செயல்களையும் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,''ஆலை தொடர்பான பாதிப்புகளை அறிவியல்பூர்வ தகவல்களாக ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்திடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள அமிலங்களின் பாதிப்புகள் கசியக்கூடியதா? என்பதை ஆய்வு செய்திடுமாறு, மாசுக்கப்பட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS