பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அங்கு பல நாட்டு அதிபர்களையும் பிரதமர்களையும் சந்திக்கும் போது அவருக்கு பல பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.இதன் மதிப்பு மற்றும் பரிசுப்பொருட்களின் விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

பிரதமர் மோடி 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் ஜெர்மனி, சீனா, ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, ஓமன், ஸ்வீடன், இங்கிலாந்து, இந்தோனேஷிய, மலேசியா போன்ற 20 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஒரு வருடத்தில் மட்டும் வெளிநாடுகளில் அவருக்கு 169 பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 12 லட்சம் ரூபாய் வரை  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1.10 லட்சம் மதிப்புள்ள மோண்ட்பிளான்க் கை கடிகாரம், 2.15 லட்சம், 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மற்றும் மோண்ட்பிளான்க் பேனாக்களும் இந்தப் பரிசுப் பொருள்களில் அடங்கும். இது மட்டுமல்லாது வெள்ளி மற்றும் கிறிஸ்டல் கிண்ணங்கள், பசுபதிநாத் மற்றும் முக்திநாத் கோயில்களின் பிரதிகள், சால்வைகள், கடவுள்களின் சிலைகள், டீ கப்கள், தரை விரிப்புகள், ஃபௌண்டயின் பேனாக்கள் ஆகியவையும் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

சிலைகள், ஓவியங்கள், புத்தகங்கள், புல்லட் ரயிலின் புகைப்படம் மற்றும் மாதிரிகள் போன்றவற்றை தன் வெளிநாட்டுப் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர்களுக்கு மோடி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY JENO | AUG 27, 2018 4:14 PM #NARENDRAMODI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS