பெண் போல் ஆடிப்பாடிய ‘மியூசிக்கலி’ இளைஞர்.. ஆபாச கமெண்டுகளால் தற்கொலை?

Home > தமிழ் news
By |

புகழ்பெற்ற மியூசிக்கலி எனும் செயலிதான் தற்போது டிக்-டொக் என்று புதிய வடிவத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய இளசுகளின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத, பொழுதுபோக்கு அம்சமான இந்த செயலியில் பலரும் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் புகழ்பெற்ற நடிகர்களின் வசனத்தை இமிடேட் செய்தும் பதிவிடுவதுண்டு.இந்த செயலி மூலம்  தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பலரும் திரைத்துறைக்குள் கூட வந்திருக்கின்றனர்.

 

இந்நிலையில் இந்த செயலியில் கடந்த சில நாட்களாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 24 வயது கலையரசன் என்பவர் பெண் வேடமிட்டு ஆடுவதும் பெண் குரலில் வரும் பாடல்களுக்கு வாய் அசைப்பதும் போன்ற வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டாகி வந்து கொண்டிருந்தார்.

 

ஆனால் கலையரசனின் இயல்பையும் பேச்சையும் கண்ட பலரும் இந்த செயலியின் மூலம் தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி கமெண்ட் செய்துள்ளனர். இவற்றால் அதிருப்தி அடைந்த கலையரசன் மிக நிதானமாகவும் தெளிவாகவும், ‘இது போன்ற காரியங்களை செய்யாதீர்கள் ப்ளீஸ்’ என்று ஒரு பதிவும் போட்டுள்ளார். இருப்பினும் அவை தொடர்ந்தன.

 

இதனிடையில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கலையரசன் அடிபட்டு இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை துலக்கிய போலீசார், தற்போது இந்த மியூசிக்கலி விவகாரத்தை கண்டறிந்துள்ளனர். மியூசிக்கலி செயலியின் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான கலையரசன் இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பெரிதாகவும், எதிர்பாராத விபத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் குறைந்தபட்ச சந்தேகத்துடனும் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

 

எனினும் கலையரசனின் அப்போதைய வீடியோக்கள் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருவதோடு, அவருக்கு பலரும் இரங்கல் தெரிவிக்க, அவ்வாறு மோசமான கமெண்டுகளை இட்டு, கலையரசனின் தன்மையை இழிவுபடுத்தியவர்களை, பலர் திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

APP, MUSICALLYAPP, MUSICALLY, TREND, KALAIYARASANDEAD, MUSICALLYKALAIYARASAN, NEGATIVECOMMENTS, SOCIALMEDIA, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS