‘3 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத இட்லி’.. புதிய முறையை கண்டுபிடித்து அசத்திய பேராசிரியை!

Home > News Shots > தமிழ் news
By |

இட்லியை 3 வருடங்கள் கெட்டுப்போகாமல் வைக்கும் புதிய முறையை மும்பை பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக வைஷாலி பம்போல் பணியாற்றி வருகிறார். இவர் வேகவைத்து சமைக்கும் உணவு பொருள்களான இட்லி மற்றும் வடமாநில உணவுப் பொருளான வெள்ளை தோக்லா இவற்றை 3 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.

இந்த புதிய முறையைக் கண்டுபிடிக்க கடந்த 15 வருடங்களாக முயற்சித்து வருவதாக பேராசிரியை வைஷாலி கூறியுள்ளார். மேலும் உணவு பொருள்களின் ஆயுளை அதிகரிக்க பிரத்யேகமான தொழில் நுட்பத்தை பயன்படுத்திவருவதாக தெரிவித்த பேராசிரியை வைஷாலி, இது நடைமுறைக்கு வந்தால் உணவுத்துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.  

மேலும், இயற்கை பேரிடர்களின் போது இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் உணவு பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது என பேராசிரியை வைஷாலி தெரிவித்துள்ளார்.

MAHARASHTRA, PROFESSOR, IDLI, TECHNOLOGY

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES