ஐபிஎல் 2019: அதிரடி வீரரை மும்பைக்கு விற்றது பெங்களூரு ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ்!

Home > தமிழ் news
By |

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே, விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக்கை பெங்களூரு அணி, மும்பைக்கு விற்றுள்ளது.

 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக விளையாடினார். 8 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார்.

 

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.2.8 கோடிக்கு பெங்களூரு அணி அவரை வாங்கியிருந்தது.இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே தொகைக்கு அவரை மும்பைக்கு அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு.

 

இஷான் கிஷான், ஆதித்யா தாரே என விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக டி காக்கும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.கடந்த ஆண்டு தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் இந்த வருடமும் அதை தொடர்வார் என மும்பை அணி எதிர்பார்க்கிறது.

 

இந்நிலையில்  கடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெவிஸ், மும்பையின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி,பல போட்டிகளில் சொதப்பினார். இதனால் டி காக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.

IPL, MUMBAI-INDIANS, BENGALURU, ROYAL-CHALLENGERS-BANGLORE, DE KOCK, SOUTH AFRICAN WICKET-KEEPER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS