'தல இந்திய டீம்ல இருக்கணுமா'...அப்போ இது தான் ஒரே வழி !
Home > தமிழ் newsதோனி மட்டுமில்லாமல் எல்லா சீனியர் வீரர்களும் உள்ளூர் தொடரில் பங்கேற்று, தங்களின் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கமுடியும் என,இந்திய ஆல் ரவுண்டர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிக சிறந்த பினிஷர் என அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.அனால் அவரது பேட்டிங் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் அவரது கீப்பிங் திறமை மற்றும் இக்கட்டான நிலைமையில் அணிக்கு அவர் அளிக்கும் ஆலோசனைகள்,அவரை அணியில் இன்னும் நீடித்திருக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் மேற்கிந்திய அணிக்கு எதிரான டி-20, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்டார். இதற்கு அவருக்கு அடுத்த சிறந்த விக்கெட் கீப்பருக்கான தேடுதல் தான் காரணம் என தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாடி சர்வதேச அணிக்கான தேர்வில் இடம்பெற,தோனி மட்டும் விதிவிலக்கல்ல என்ற சர்ச்சை சமீபத்தில் தலை தூக்கியது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய ஆல் ரவுண்டர்,மற்றும் தேர்வுக் குழு தலைவர் மோஹிந்தர் அமர்நாத்"ஒவ்வொரு வீரரும், தனித்தனி தான்.அவர் சாதிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவரது மாநிலத்திற்காக விளையாடி அவர்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.மேலும் தோனி மட்டுமில்லாமல் எல்லா சீனியர் வீரர்களும் உள்ளூர் தொடரில் பங்கேற்று, தங்களின் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபிப்பது அவசியம். இது ஒன்று தான் தோனியை சர்ச்சையில்லாமல் அடுத்த உலகக்கோப்பை அணி வரை கொண்டு செல்ல முடியும்''என்றார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘ஆஸ்திரேலிய தொடரில் அவர் காப்பாத்தலன்னா எனது கேப்டன் பதவி பறிபோயிருக்கும்’!
- படபடப்பை விட எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கிறது.. ‘பாசிடிவ்’ கோலி!
- 'எல்லாம் உங்களுக்குத் தான்'.. சும்மா புகுந்து வெளையாடுங்க கண்ணுங்களா!
- அடுத்த முறை 37 ரன்ல அவுட் ஆனா, கழுத்தை புடிச்சு தூக்கிடுவேன்!
- IND v AUS | Changes To The Indian Squad For 2nd Test In Perth; Details Inside
- ஒரே இன்னிங்ஸில் 11 ரன்கள் கொடுத்து, 10 விக்கெட்டுகள் எடுத்து, கிரிக்கெட் வீரர் சாதனை!
- இந்தியாவில் இருந்து ஐபிஎல் ஏலத்தில் 17 வயது பையன்.. மெர்சல் ஆன கிரிக்கெட் ரசிகர்கள்!
- IPL 2019 Auction | This Bowler Is The Highest-Priced Indian Player With Base Price Of Rs 1.5 Crore
- 'புதுசு புதுசா யோசிக்கிறாங்க பா'.... புதிய முறையில் ‘டாஸ்’...ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம்!
- ''அது எப்படி சார்..இங்க வாங்க...அடிக்கலாம் மாட்டேன் இங்க வாங்க''...கோலியை கலாய்த்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்!