மீண்டும் கேப்டனாக, ’தோனி’ களமிறங்கும் 200வது ஒருநாள் போட்டி!

Home > தமிழ் news
By |

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடவிருக்கும் இந்த ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு தோனி விளையாடவிருக்கு தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது. 

 

இதுபற்றி கூறிய தோனி, ‘எதுவும் என் கையில் இல்லை. எதுவுமே முடிவும் ஆரம்பமும் என்று இல்லை. இதுவரை 199 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறேன். இருப்பினும் 2017-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு இந்த ஒரு நாள் போட்டி நான் கேப்டனாக வழிநடத்தும் 200-வது போட்டி’ என்று கூறினார்.

 

மேலும் இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்வதால், இந்திய அணி பந்துவீச்சையே தேர்வு செய்ய உள்ளதாகவும் இருப்பினும் சிறப்பான தொடக்க பந்துவீச்சார்களை இந்த அணியில் பெறவில்லை என்றும், எனினும் நடப்பு அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட அனைவரின் முழு கவனமும் ஒத்துழைப்பும் அவசியம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

ASIACUP2018, MSDHONI, ODI, CRICKET, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS