எதற்காக மாணவர்கள் காலில் ஓடிஓடி விழுகிறார் இந்த பேராசிரியர்? பரவும் வீடியோ!

Home > தமிழ் news
By |

மத்திய பிரதேசத்தில், ராஜீவ் காந்தி முதுகலை கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் ஒவ்வொருவரின் காலிலும் சரமாரியாக ஓடி விழும் வீடியோ வைரலாகி வருகிறது.


அகில் பாரத்யா வித்யார்த்தி பரிஷத் ஆதரவு மாணவர்கள் சில ’பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டதை அடுத்து, அவர்களை கோஷமிட வேண்டாம் என்று கூறிய பேராசிரியரின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் கோஷமிடுவதை நிறுத்தினர்.


எனினும் அவர் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து,  பேராசிரியர் மாணவர்களின் காலில் விழ முயற்சித்துள்ளார்.  இதுபற்றி ராஜீவ் காந்தி கல்லூரியின் முதல்வர் ரவீந்திர சோஹ்னி கூறும்பொழுது, ‘மாணவர்கள் கோஷம் இடுவதை பேராசியர் தடுத்ததாக மிகைப்படுத்தப்படுகிறது.

 

அவர் நிறுத்த சொன்னார் அவ்வளவுதான். மேலும் மாணவர்கள்தான் பேராசியரை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அதன் பேரிலேயே அவர் உணர்ச்சிவசப்பட்டு காலில் விழச் சென்றார்’ என்றும் கூறியுள்ளார்.

 

COLLEGESTUDENTS, MADHYAPRADESH, ABVP

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS