கனடாவின் கடல் பகுதியைச் சேர்ந்த ஜே 35 என்னும் 20 வயது திமிங்கலம்,கடந்த ஜூலை 24-ம் தேதி குட்டி ஒன்றை பிரசவித்தது.பிறந்து 30 நிமிடங்களில் அந்த குட்டி திமிங்கலம் இறந்து விட்டது. இதனை NOAA Fisheries என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த நிகழ்வை அன்றே படம் பிடித்திருந்தனர்.

 

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் (ஆகஸ்ட் 8) அந்த திமிங்கலத்தை புகைப்படம் எடுத்த அமைப்பினர் அப்படியே உறைந்து போனார்கள்.காரணம் இறந்து 16 நாளான தனது குட்டியையும் தூக்கிக் கொண்டே அந்த திமிங்கலம் அலைந்துள்ளது.

 

காண்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் இந்த புகைப்படம், தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BY MANJULA | AUG 10, 2018 3:53 PM #WHALE #CANADA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS