‘மகனின்’ தலைமுடியை 23 முறை அலசிய பின் ‘மதரின்’ முடிவு இதுதான்!

Home > தமிழ் news
By |

அடம் பிடிக்கும் சுட்டிக் குழந்தைகளை குளிப்பாட்டும் அம்மாக்களுக்கு அவார்டே கொடுக்கலாம். அத்தனை சுலபமான காரியம் அல்ல அது என்பதுதான் காரணம். இப்படித்தான், தனது 3 வயது மகனின் தலைமுடியை 23 முறை அலசி, அவதிக்கு உள்ளாகியிருக்கிறார் ஒரு தாய் (மதர்).

 

வெளிநாட்டில் வசிக்கும் 23 வயதான  ஜெமிலீ ஸ்டீவர்டு தன் மகனின் தலையில், வேஸலைன் கூழ்மத்தை கொண்டு தலையில் இருக்கும் பொடுகு, மாசுக்களை அகற்ற முயன்று தலையை தேய்த்து குளிப்பாட்டியுள்ளார். 

 

ஆனால், சில மணி நேரத்தில் கூழ்மமான ஜெல் அல்லது பேஸ்ட் போன்று தலைமுடியில் ஒட்டிக்கொண்ட அந்த வேதியத்தை அகற்ற மீண்டும் மீண்டும் தண்ணீர், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தி அதிக தண்ணீரையும் இரைத்துள்ளார். ஆனாலும் சிறுவனின் தலையில் கூழ்மமான நுரை இருந்துகொண்டே இருந்துள்ளதை பார்த்து சிரமப்பட்ட அந்த அம்மா, அப்படியே மகனை நிற்கவைத்துவிட்டு, ‘ஆபத்பாந்தவன்’ கூகுளின் உதவியை நாடியுள்ளார். அப்போது ஒருவர் கூறிய தால்கம் பவுடரை போட்டு பார்க்கும் யோசனையையும் செய்துள்ளார்.

 

மொத்தமாக  23 ஷாம்பூக்கள், 2 முழுமையான கண்டிஷனர்கள், அரை பை சோளமாவு, தால்கம் பவுடர், வீட்டை சுத்தப்படுத்தும் லுகாஸ் க்ளீனர் வரை போட்டு முயற்சித்து 6 மணி நேர அவஸ்தைக்கு பிறகு, இந்த தாய் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். பேசாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பேபி-கேர் நிறுவனக்காரர்களிடம் மகனை, தலையில் தொப்பி போட்டு கவர் செய்து அழைத்துச் செல்வதென்று. இந்த சம்பவத்தை தன் இணையத்தில் ஷேர் செய்ததை அடுத்து விஷயம் வைரலாகி வருகிறது. பலரும் பலவிதமான ஆலோசனைகளை கூறி வந்தனர். 

VIRAL, SON, MOTHER, BATHING, WASHINGHAIR, BUZZ

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS