BMW-வை திருடிய 13 வயது மகன்.. தேடிப்பிடித்து அம்மா செய்த காரியம்!

Home > தமிழ் news
By |

அம்மாவுக்கு தெரியாமல் பி.எம்.டபுள்யூ காரினை கேர்ள் பிரண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த 13 வயது சிறுவனை அம்மா விரட்டி பிடித்து அடித்துள்ளதை, சிறுவனின் அக்கா படம் பிடித்து இணையத்தில் விட்டுள்ளது வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் அருகே வசிக்கும் ஆரோன் என்கிற 13 வயது மிடுக்கான சிறுவன், தன் அம்மா வாங்கிய புதிய பி.எம்.டபுள்யூ காரை எடுத்துச் சென்றி தன் நண்பனிடமும் தோழியிடமும் காட்டுவதற்காக எடுத்துச் சென்றிருக்கிறான். 

 

இதற்காக வீட்டு வைஃபை உள்ளிட்ட இணையதள கனெக்‌ஷன்களை துண்டித்து காரில் இருந்த ஜி.பி.எஸ் லொகேஷன் டிராக்கரை செயலிழக்கச் செய்து திறமையாக காரினை எடுத்துச் சென்றுள்ளான். மகனைத் தேடி, தன் மூத்த வயது  மகளுடன் சென்ற அம்மா, வழியில் ஆரோனை பார்த்துள்ளார். பார்த்த மாத்திரத்தில் தன் காரில் இருந்து பெல்ட்டை எடுத்துச் சென்று, மகனை பி.எம்.டபுள்யூ காரில் இருந்து இறக்கி அவனை விளாசியிருக்கிறார். 

 

மகன் எங்கோ காரை எடுத்துச் சென்று ஆபத்தில் முடிந்துவிடுமோ என்கிற அக்கறையின் காரணமாக அடித்துள்ள அம்மாவின் செயலை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ள மூத்த மகள், ‘இந்த லைசன்ஸ் பெறாத டிரைவரை அம்மா பெல்ட்டினால் விளாசுவதை பாருங்கள்’ என்று விளையாட்டாக பதிவிட, வீடியோவும் செய்தியும் வைரலாகி வருகின்றன.

 

இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டால், 10 வருடங்களுக்கு முன்பு கையில் கிடைத்த புது ஸ்ப்ளெண்டர் ப்ளஸை பக்கத்து ஊருக்கு ஓட்டிச் சென்று நண்பனிடம் சீன் போட போனபோது, ’போய் யூ-டர்ன் பண்ணிக்கொண்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் எங்கே காணோம்’ என என் அண்ணன் பின்னாலேயே வந்து வண்டியை சுற்றி சுற்றி வந்து பளார் பளார் என அடித்த சொந்த கதையெல்லாம் கைவசம் இருக்கு பாஸ்!

 

BMW, FUN, VIRAL, VIDEOS, MOTHER, 13YEAROLDSON, SONSTEALSCAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS