வத்தலகுண்டு அருகே நிகழ்ந்த விபத்தொன்றில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து விபத்தில் காயம் பட்டவர்கள் அருகில் உள்ள வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குறித்த நேரத்தி, மருத்துவர்கள் வராத காரணத்தால் அந்த மருத்துவமனையில் இருந்த பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்துள்ளார்.

 

அங்கிருந்த பொதுமக்கள் இதனை படம் பிடித்து செய்தி சேனல்களுக்கு அனுப்பியுள்ளதோடு, காயம் பட்ட பெண்மணி புகாரும் அளித்துள்ளார். அடிபட்டு மயக்க நிலையில் இருக்கும் பெண்மணிக்கு எவ்வித மயக்கமருந்தும் கொடுக்காமல், மருத்துவர்களின் கண்காணிப்பும், உதவியும் இல்லாமல்  பிணவறை ஊழியர் தனக்கு சிகிச்சை அளித்ததாக அந்த பெண்மணி புகார் அளித்திருந்ததை அடுத்து, இதுகுறித்து பதில் அளித்த வத்தலகுண்டு அரசு சுகாதார ஊழியர் மணிமேகலை, மருத்துவர்கள் வர தாமதமாகியதால், பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்துள்ளார் என்றும், மேலும் அவர் வெறும் பிணவறை ஊழியர் அல்ல, பல்நோக்கு சுகாதார ஊழியர், அவருக்கு முறையாக முதலுதவி அளிப்பதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

 

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY SIVA SANKAR | AUG 31, 2018 12:37 PM #HOSPITAL #GOVERNMENTHOSPITAL #TNGOVTHOSPITAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS