2,200 பிரெட் துண்டுகளைக் கொண்டு உருவான புதிய மொசைக் ஆர்ட்!

Home > தமிழ் news
By |

வெஜிடபிள் கார்விங் எனப்படும், காய்கறிகள் மூலமாக சிற்பங்களை உருவாக்குவது மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் பிரெட் துண்டுகளை வைத்து உருவாக்கியுள்ள மொசைக் ஆர்ட்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படித்தான் ஜப்பானில் உள்ள ஃபியூகோகா ஆர்ட் ஸ்கூலை சேர்ந்த மாணவர்கள் குழுவாக உருவாக்கிய மோனலிஸா மொசைக் ஆர்ட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


2.4 அடி உயரமும் 1.5 அடி அங்குலமும் கொண்ட இந்த ஆர்ட்டை 2 மாதங்களில் உருவாக்கிய இந்த மாணவர்கள்  இதனை கருப்பு, வெள்ளை கேக்குகளைக் கொண்டு உருவாக்கியதோடு 2,200 பிரெட் துண்டுகள் காய்ந்த பிறகு அவற்றை டிரிம் செய்து இந்த சிலையை உருவாக்கியுள்ளனர்.


‘கடைசி விருந்து’என்கிற தலைப்பில், லியோனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற மோனாலிஸா ஓவியத்தை இவ்வாறு மொசைக் ஆர்ட்டாக உருவாக்கிய இந்த மாணவ குழுவின் தலைவரான 19 வயது அகாரி நாகாடா, இதற்கான வண்ணங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் தீட்டப்பட்டு இந்த ஓவியம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

MONALISA, ART, BREADART, JAPAN, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS