டெல்லியில் குரங்குத் தொல்லை அதிகமாகி வருவதாக இந்திய தேசிய லோக் தளத்தின் ராம் குமார் கஷ்யப் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய அவர் குரங்குகள் செடிகளை சாய்த்து விடுவதாகவும் காயப்போட்டிருக்கும் துணிகளை தூக்கிச் சென்று விடுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.


குரங்குகளால் பாதிக்கப்பட்டதால் பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் முக்கிய கூட்டம் ஒன்றிற்கு தாமதமாக வந்ததாக குறிப்பிட்டார்.


இதைத் தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தனது இல்லத்திலும் குரங்குத் தொல்லை இருப்பதாகக் கூறினார். விளையாட்டாகப் பேசிய அவர், "மேனகா காந்தி அங்கு இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்," என விலங்கு நல ஆர்வலர்களையும் அவர்களுள் ஒருவரான மத்திய அமைச்சர் மேனகா காந்தியையும் குறிப்பிட்டு பேசினார்.


பின்பு பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் விஜய் கோயல் குரங்குகள் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகாண வேண்டுமென்று  கேட்டுக்கொண்டார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 24, 2018 6:27 PM #MONKEYSPROBLEM #DELHI #VENKAIAHNAIDU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS