இந்தியா போன்ற நாடுகளைப் பொருத்தவரை, பெட்ரோலின் பயன்பாடு அதிகம்தான். மிகுந்த வாகன நெருக்கடிகள் இருந்தபோதிலும், பெட்ரோல் பயன்பாடுகள் உள்ள வாகனங்களை உபயோகிப்பதில் மக்கள் தீவிரமாக உள்ளனர். இதன் காரணமாகவே தற்போது தெர்மல் பேட்டரி கார்களை உற்பத்தி செய்வதற்கான முனைப்பில் இந்திய வணிக நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

 

எனினும் பெட்ரோலுக்கு நிகரான புதுப்பிக்க கூடிய ஆற்றலாக ’எத்தனால்’ இருந்து வருவதால், பெட்ரோலை எத்தனாலுடன் கலந்து பயன்படுத்தும்  புதிய திட்டத்தினை அரசு செயல்படுத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

இதன்படி வரும் 2022-ஆம் ஆண்டில் பெட்ரோலுடன்  10% எத்தனாலும், 2030-ஆம் ஆண்டில் 20% எத்தனாலும் கலப்பதே அரசின் இலக்காக இருக்கும் என கூறிய பிரதமர் மோடி, வேளாண் கழிவுகளின் மூலம் ’எத்தனால்’ உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்று டெல்லியில் நடந்த, ’உலக உயிரி எரிபொருள் தின விழா’வில் பேசியபோது குறிப்பிட்டுள்ளார்.

BY SIVA SANKAR | AUG 10, 2018 3:43 PM #NARENDRAMODI #INDIA #TARGET2022 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS