திமுக-வின் தலைவர் பதவியை ஏற்ற, மு.க.ஸ்டாலின் ’என் உயிரினும் மேலான’ என கருணாநிதி பாணியில், பேசத்தொடங்கி, தந்தை போல் தனக்கு மொழி ஆளுமை தனக்கு கிடையாது என்றும் தலைவர் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லை என்பதுதான் ஒரே குறை என்றும் பேசினார். 

 

மேலும் பேசியவர் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்பதே திமுகவின் 4 தூண்கள் என்றும், சுயமரியாதை எனும் முதுகெலும்பு இல்லாத மாநில அரசையும் மதவெறியால் மக்களாட்சி மாண்பை குலைக்கும் மத்திய அரசையும் எதிர்த்து போரிட வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

 

மேலும் ’மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா’ என்று நேரடியாக தன் தொண்டர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலினின் பேச்சு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

BY BEHINDWOODS NEWS BUREAU | AUG 28, 2018 1:56 PM #MKSTALIN #DMK #MKARUNANIDHI #NARENDRAMODI #EDAPPADIKPALANISWAMI #AIADMK #BJP #DMKLEADER #DMKTHALAIVARSTALIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS