தாமரை மலர சூரிய சக்தி தேவையா? தேவையில்லையா?: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்!

Home > தமிழ் news
By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பாஜக மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜனும் ட்விட்டரில் ஒருவரையொருவர் ரி-ட்வீட் செய்து பேசியிருக்கும் உரையாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் உள்ளன. 

 

மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில்., ‘இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும். விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்’ என்று ட்வீட் செய்தார். 

 

இதைப் பார்த்த மு.க.ஸ்டாலின் மீண்டும் தனது ட்விட்டரில்,’சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்’  என்று பஞ்ச் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

இதற்கும் பதில் அளிக்கும் விதமாக தமிழிசை, ‘அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது.  இது அன்றாட நிகழ்வு. மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்,சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும் குளத்து நீரில் மிதக்கும் தாமரையை, கருகச்செய்யாது, கருகச்செய்யவும் முடியாது...இது இயற்கை நியதி’ என்று ட்வீட் செய்துள்ளார். 

 

MKSTALIN, TAMILISAI SOUNDARARAJAN, DMK, BJP, TAMILNADU, TWEETTUSSLE, TWITTERWAR, VIRAL, LOTUS, SUN, SUNLIGHT, THAMARAI, SURIYAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS