கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கருணாநிதியின் மறைவுக்குப் பின் அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவ்வகையில் முன்னாள் திமுக உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான மு.க.அழகிரி தன் குடும்பத்துடன் தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

 

அஞ்சலி செலுத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, பேட்டியை தொடங்குமுன் அவருக்கு முன் இருந்த ஊடகங்களின் ஒலிபெருக்கி குழாய்களை (மைக்) பார்த்துவிட்டு அங்கிருந்த, ’கலைஞருக்கு சொந்தமான, தனியார் தொலைக்காட்சி ஒன்றின்’ மைக்கை சுட்டிக்காட்டி, ”இந்த சேனலில் நான் சொல்வதை எல்லாம் போட மாட்டார்களே.. இதை எதற்காக இங்கு வைத்தார்கள்... பேசலாமா பரவாயில்லையா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடங்கினார்.

 

அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இப்படி எள்ளி நகையாடிய மு.க.அழகிரி, அதன்பின் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைக் கேட்டபொழுது, தான் கட்சியிலேயே இல்லை என்றும், அதைப்பற்றி எல்லாம் தன்னிடம் பேசவேண்டாம் என்றும் கூறினார்.  மேலும் தனக்கு இருக்கும் ஆதங்கத்தை கலைஞரிடம் ஏற்கனவே கூறியதாகவும், அதை இப்போது வெளியிட முடியாது, காலம் பதில் சொல்லும், உண்மையான விசுவாசிகள் எல்லாம் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று பதிலளித்துவிட்டு கிளம்பினார். கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அழகிரியின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | AUG 13, 2018 12:50 PM #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #DMK #MKSTALIN #KALAIGNAR #MKAZHAGIRI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS