‘H2O என்றால் என்ன?’: அழகிப்போட்டியில் பெண் சொன்ன பதில் வைரல்!

Home > தமிழ் news
By |
‘H2O என்றால் என்ன?’: அழகிப்போட்டியில் பெண் சொன்ன பதில் வைரல்!

வங்க தேசம் எனப்படும் பங்களாதேஷில் அந்நாட்டு உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வண்ணமயமான ஆடைகளில் வந்த மாடல் அழகிகளை அடுத்த கட்ட சோதனைக்காக நடுவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். அதில் ஒரு பெண்ணை நடுவர் கேட்ட கேள்விக்கு அந்த பெண் விளையாட்டாக சொன்ன பதில் வைரலாகி வருகிறது. 

 

அழகி போட்டியின் ஒரு சுற்றான கேள்வி கேட்கும் சுற்றுக்கு முன்னேறியிருந்த ஒரு பெண்ணிடம் நடுவர் கெமிஸ்ட்ரியில் இருந்து, ‘H2O என்றால் என்ன?’ என்று கேட்டிருக்கிறார். ஒரு கணம் திகைத்தார். ’H2O வா?’ என்று கேள்வியை மறுமுறை நடுவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். ஆனாலும் வித்தியாசமான முக பாவனைகளை சிரித்தபடி கொடுத்த அந்த பெண் குழப்பமான நிலையில் செய்வதறியாமல் தவித்தார். 

 

உடனே நடுவரே முன்வந்து, ‘அப்படி என்றால் வேதியியல் முறையில் தண்ணீர்  என்று அர்த்தம். அதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அந்த பெண்ணோ, ‘அப்படி என்றால் அது உணவகத்தின் பெயர் கிடையாதா’ என்று கேட்டிருக்கிறார்.

 

ஆம், வங்கதேசத்தின் தன்மோண்டியி உள்ள புகழ்பெற்ற உணவகத்திற்கும் இதே பெயர்தான் என்பதால், அந்த பதிலுக்கு பின் அரங்கத்தின் சிரிப்பொலி கூறையைப் பிளந்தது. இறுதியில் ஜனாடுல் ஃபெர்டோஸ் ஒய்ஷி எனும் வேறு ஒரு பெண் மிஸ்.பங்களாதேஷ் அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

VIRAL, VIDEOS, VIRALVIDEO, BANGLADESH, MISSWORLDCONTESTANT, H2O

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS