#MeToo-வில் சிக்கிய 48 ஊழியர்கள்: சுந்தர் பிச்சை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Home > தமிழ் news
By |

பாலியல் குற்றங்களை செய்தவர்களை #MeToo-வில் தொடர்ந்து பலதரப்பட்ட  வகையில் பாதிப்படைந்தவர்கள் அம்பலப் படுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய பங்கு வகிப்பது இணையதளம். 

 

சமூக வலைதளங்கள் இல்லையேல் இன்று பெண்கள் இவ்வாறு தங்களை சீண்டியவர்களை அடையாளப்படுத்த முடியுமா என்பது கேள்விதான். அதற்கு அச்சாரமாய் விளங்கும் தொழில்நுட்ப - இணைய சேவைகளில் முக்கியமான ஒன்று கூகுள் தேடுபொறி.   

 

இந்நிலையில், கூகுளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் உட்பட 48 ஊழியர்கள் இதுபோன்ற புகார்களில் சிக்கியதாகவும், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு பணிக்கொடைகள் வழங்கப்பட்டதாகவும் கூகுளின் முதன்மை செயல் அலுவலர் கூறியிருக்கிறார். 

 

எனினும் ஆண்ராய்டை உருவாக்கிய ஆண்டி ரூபின் என்பவரும் இதே போல் புகாரில் சிக்கியவர்தான் என்றாலும் அவர் மீதான் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சுந்தர் பிச்சை வெளியிடவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. 

METOO, METOOINDIA, GOOGLE, SUNDARPICHAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS