#MeToo விவகாரம்: ப்ரியா ரமணிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த எம்ஜே அக்பர்!

Home > தமிழ் news
By |

மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கடந்த வாரம் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தபோது மீ டூ என்கிற, ‘பாலியல் குற்றவாளிகளை அம்பலப்படுத்தும்’ ஹேஷ்டேகின் கீழ், பத்திரிகை எழுத்தாளர் ப்ரியா ரமணி, எம்ஜே அக்பர் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். 

 

மேலும் முன்னதாக  மூத்த பத்திரிகையாளராக பதவி வகித்த போது எம்.ஜே.அக்பர் நிறைய பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்த ப்ரியா ரமணியின் புகாருக்கு அடுத்து, இந்தியா வந்த அக்பர் மீது பாஜக தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. 

 

அப்போது பேட்டி அளித்திருந்த எம்.ஜே.அக்பர், ப்ரியா ரமணி தனது பதிவில், ‘யாரென்று பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அதைச் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தன் மீதான அவதூறு கருத்துக்களை கூறும் ப்ரியா ரமணி மீது அக்பர், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கினை தொடர்ந்துள்ளார். 

METOO, METOOINDIA, SEXUALABUSE, MJAKBAR, PRIYARAMANI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS