Watch Video: சொன்னதுபோலவே #METOO வீடியோவை வெளியிட்ட நடன இயக்குநர்!

Home > தமிழ் news
By |
Watch Video: சொன்னதுபோலவே #METOO வீடியோவை வெளியிட்ட நடன இயக்குநர்!

ராஜா ராணி, திரிஷா இல்லேன்னா நயன்தாரா,தெறி உட்பட ஏராளமான படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் ஷெரிப். தற்போது கார்த்திக் சுப்புராஜின் பேட்ட திரைப்படத்திற்கு நடன இயக்குநராக ஷெரிப் பணியாற்றி வருகிறார்.

 

இன்று மதியம் ஷெரிப் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' இன்று மாலை 6 மணிக்கு #METOO குறித்து அதிர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிடப் போகிறேன்,'' என தெரிவித்திருந்தார். இதுகுறித்த உண்மையினை அறிவதற்காக நாம் அவரைத் தொடர்பு கொண்டோம்.

 

பதிலுக்கு ஷெரிப்,'' நான் சொன்னது அனைத்தும் உண்மைதான். இன்று மாலை 6 மணி வரை காத்திருங்கள். நான் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை புகைப்படங்களுடன் வெளியிடப் போகிறேன். அது நீங்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்,'' என தெரிவித்தார்.

 

இந்தநிலையில் சொன்ன்னதுபோலவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷெரிப் #METOO குறித்த வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். வீடியோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்.

TWITTER, SHERIF, #METOO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS