ஆம். பாலியல் ரீதியாக பேசியது உண்மைதான்'.. நீ என்னை மன்னிப்பாயா?

Home > தமிழ் news
By |

தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு, பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்து இருக்கிறார்.

 

பத்திரிகையாளரான ஷீனா என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 எழுத்தாளர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்தார். அதில் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் இடம் பெற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. 

 

இந்த நிலையில் அது உண்மைதான் என  சேத்தன் பகத் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துளளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,'' இந்தச்  சம்பவம் நடந்தது உண்மைதான். அந்தப் பெண்ணிடம்  நான் ஒருவித நட்பை உணர்ந்ததும் உண்மைதான். இது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒன்று. இதைப் பற்றின எல்லா விவரங்களையும்  எனக்கு நினைவில் இருக்கும்வரை, நான் தனிப்பட்ட முறையில் கூறிவிட்டேன். மேலும், நான் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளோ புகைப்படங்களோ  பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் சம்பவத்திற்குப்பின்,  நான் அந்தப் பெண்ணின் நம்பரை என் மொபைலில் இருந்து அழித்துவிட்டேன்.

 

சில  நேரங்களில் நமக்கு சில விஷயங்கள் தோன்றும். அந்தப் பெண் எல்லாரையும்  விடச் சற்றே வித்தியாசமாக  எனக்குத் தெரிந்தார்.  நான் அதைப் பற்றி  அவரிடம் பகிர்ந்திருக்கக்கூடாது.மறுபடியும், அந்தப் பெண்ணிடமும் மிகவும்  குறிப்பாக, என் மனைவி அனுஷாவிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீ என்னை மன்னிப்பாய் என்று  நம்புகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு #Metoo என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் துன்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக பிரபலங்கள் பலரும் இந்த ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான பாலியல் துன்பங்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FACEBOOK, #METOO, CHETANBHAGAT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS