'இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு'.. படமே வேணாம் என, விலகிக்கொண்ட பிரபல நடிகர்!

Home > தமிழ் news
By |

கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும்  தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.

 

தற்போது மீண்டும் இந்த ஹேஷ்டேக்கில் பல்வேறு தரப்பினரும் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை பதிவிட்டு வருவதால்,மீண்டும் இந்த ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. இதற்கு பிரபலங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் தான் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குநர் மீது பாலியல் புகார் எழுந்ததால், அப்படத்திலிருந்து பிரபல நடிகர் அமீர்கான் விலகியிருக்கிறார். இதுகுறித்து அமீர் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,''திரைப்படத்துறை என்பது அனைவரும்  பாதுகாப்பாய் வேலை செய்யும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அடுத்து நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குநர் சுபாஷ் கபூருடன் பணிபுரிய விருப்பமில்லை.

 

பாலியல் குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம். அவரது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், இவர்போன்ற ஆள்களுடன் பணிபுரிய வேண்டாம் என முடிவெடுத்து நாங்கள் அப்படத்தில்(மொகல்) இருந்து விலகுகிறோம். திரைப்படத் துறையை பாதுகாப்பான வேலையிடமாக மாற்ற நாங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்போம்,'' என தெரிவித்துள்ளார்.

#METOO, BOLLYWOOD, AAMIRKHAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS