
பூமி வெப்பமாவதை தொடர்ந்து விண்வெளியில் பல மாற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன.பருவ நிலை மாற்றம்,மழைப்பொழிவு என காலநிலைகளில் மாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதைபோல் ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலம் பூமியை நோட்டமிட்டு செல்கிறார்கள் என அவ்வப்போது செய்திகள் வரும்.
இந்நிலையில் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி எரிகல் வேகமாக வந்த காட்சி,மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும் விண்வெளியில் இருந்து நெருப்பு போன்ற பந்து ஒன்று சாலை ஓரத்தில் விழுந்ததாக சாலையில் பயணித்தவர்கள் கூறியுள்ளார்கள் .இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது அவர் வாகனத்தை ஓட்டி கொண்டு செல்லும் போது திடீரென பயங்கர ஒளி போன்ற ஒரு பந்து சாலையை நோக்கி வந்து இருக்கிறது.இதனால் அவர் பயந்து வாகனத்தை சாலை அருகில் நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலியா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS