‘இப்படியெல்லாமா உலக சாதனை செய்வாங்க’: இளைஞரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |

ஜெர்மனியின் டொர்ட்மண்டு நகரத்தில் ஒருவர் வாகன ஓட்டுரிமத்தை 49 நிமிடங்களில் இழந்து, அதையே உலக சாதனை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வரும் சம்பவம் இணையத்தில் பலரையும் விழிபெருக்க வைத்துள்ளது.

 

50 கி.மீ வேகத்தில் மட்டுமே போகவேண்டிய சாலையில், நண்பர்களுடன் வேகமாக சென்று தனது திறமையை நிரூபிக்கும் சவால்-நோக்கத்தில், லைசன்ஸ் வாங்கிய சில நிமிடங்களிலேயே மணிக்கு 95 கி.மீ என்கிற வேகத்தில் தனது வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார் அந்த இளைஞர்.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை போலீசார் மடக்கிப் பிடித்து, அவர் அப்போதே வாங்கியிருந்த அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்த்தோடு 200 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளனர். இச்சம்பவத்தின்போது, அங்கிருந்த போலீஸ், ‘சில விஷயங்கள் சில மணிநேரம் கூட நம்மிடம் தங்காது’ என்றும் கூறியுள்ளனர்.

 

இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வர, உலகிலேயே ஓட்டுநர் உரிமம் வாங்கி மிக குறைந்த நேரத்தில் தனது செயலால் அதனை இழந்துள்ள இந்த நபருக்கு நடந்ததை உலக சாதனை என்றே சொல்லலாம் என்றும் இப்படியெல்லாமா உலக சாதனை செய்வது என்றும் விமர்சித்துள்ளனர்.

BUZZ, CAR, TRENDING, VIRAL, DRIVINGLICENSE, SPEEDDRIVING, ROAD, GERMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS