தலைநகரின் முதல்வர் மீது மிளகாய் பொடி தாக்குதல்; வலுக்கும் கண்டனங்கள்!

Home > தமிழ் news
By |

தலைநகர் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி கொண்டு நபர் ஒருவர் தாக்கிய சம்ப்வம் இணையத்தில் வீடியோவாக பரவி வருவதோடு, பாதுகாப்பற்று இருந்த போலீசுக்கு கண்டனங்கள் எல்லா தரப்பில் இருந்தும் வலுத்து வருகின்றன. 

 

முன்னதாக மிளகாய் பொடி வைத்திருந்த நபர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து கைகொடுக்கும்போது மிளகாய் பொடி தவறி விழுந்ததாகவும், அது யதார்த்தமாக நடந்ததா அல்லது நோக்கத்தோடு நடந்ததா என விசாரித்து வருவதாக டெல்லி போலீசார் குறிப்பிட்டிருந்தனர். 

 

ஆனால் பிறகு வெளியான சிசிடிவி வீடியோவில் தெளிவாக பதிவான அனைத்து காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன்படி,  டெல்லி தலைமைச்செயலகத்தில் உள்ள கெஜ்ரிவாலின் அலுவலக வாசலுக்கு வந்த அந்த நபர், முதலில் கெஜ்ரிவாலுக்கு கை கொடுப்பதுபோல் கொடுத்து, பிறகு அந்த மிளகாய் பொடியை தவற விடவும், அவர் அடையாளப்பட்டுவிட்டார். 

 

ஆனால் சற்றும் யோசிக்காமல், உடனே அந்த மிளகாய் பொடியை எடுத்து கெஜ்ரிவாலின் முகத்தில் தீட்டி தாக்குகிறார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தியுள்ளனர். கண்ணாடியை தவறவிட்ட கெஜ்ரிவாலுக்கு முகத்தில் எரிச்சலும் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும், மற்றும் ஒரு முதல்வருக்கு இவ்வாறு நிகழும் அளவுக்கான பாதுகாப்பு தன்மையை அளித்துள்ள மத்திய அரசுக்கும் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் தத்தம் தரப்பில் இருந்து மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

இதனிடையே மிளகாய்ப் பொடி வீசி தாக்கிய 40 வயது மதிக்கத்தக்க அனில் குமார் என்பவர் பிடிபட்டதோடு, போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

ARVINDKEJRIWAL, DELHICM, VIRALCLIP, SECRETARIAT, CHILLI POWDER, ANIL KUMAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS