காலையில் 7-ம் வகுப்பு மாணவன்:மாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர்!

Home > தமிழ் news
By |

காலையில் காமன் மேன். மாலையான சூப்பர் நேச்சுரல் பவர் கொண்ட அதிசய மனிதராக அவதாரம் எடுத்து வலம் வருகிறார் தெலுங்கானாவை சேர்ந்த 11 வயது சிறுவன் முஹமது ஹாசன் அலி. 7-ம் வகுப்பே பயிலும் முஹமது ஹாசன் அலி மாலை நேரத்தில் பொறியியல் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் விரிவுரையாளர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனாலும் அதுதான் உண்மை.


முஹமது ஹாசன் அலி சாயுங்காலம் ஆனால் பொறியியல் படிப்பு பயிலுபவர்களும் பி.இ மற்றும் எம்.இ மாணவர்களுக்கு பாடங்களை சொல்லித் தருவதோடு பகலில் பள்ளிக்கு செல்வதும், விளையாடுவது, பாடம் கவனிப்பதும், ஹோம் வொர்க் செய்வதுமாக இருக்கும் ஒரு பள்ளி மாணவர்தான். கடந்த வருடத்தி இருந்து இவ்வாறு பொறியியல் பட்டதாரிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வரும் முஹமது ஹாசன் அலியின் திறமையைக் கண்டு வாய் பிளக்காதோரோ இருக்க முடியாது.


வெளிநாட்டில் இருப்பது போல இன்னொரு பணியை சேவையாக வழங்க விருப்பப்பட்டு இத்தகைய பணியைச் செய்வதாகவும், நம்மூர் பொறியியல் பட்டதாரிகள் அடிப்படை மொழி-தொழில்நுட்ப அறிவு-செய்முறைக் கல்விகளில் பலவீனமாக இருப்பதாலும் தான் இந்த பணியைத் தேர்வு செய்ததாகவும் கூறுகிறார் ஹாசன்.

 

இவரது கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறும் எம்.டெக் படித்து வரும் மாணவி சாய் ரேவதி கூறுகையில், ‘ஹாசன் தன் பணியில் சிறந்து விளங்குகிறார்’ என்று புகழ்கிறார்.  அறிவு என்பது கற்றலின் வளர்ச்சியே என்பதற்கு உதாரணமாய் இதற்கெல்லாம் ஹாசன் அலி ஒரு ரூபாய் கூட கட்டணமாகவோ சம்பளமாகவோ பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TELANGANA, VIRAL, MOHAMMEDHAASSANALI, INPSIRATION, POSITIVE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS