'ட்ராய்' எனப்படும் இந்திய ஆதார் கழகத்தின் இயக்குனர் ஷர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதார் எண்களை வைத்து தனிநபர் விபரங்களை இணையதளம் மூலமாக ஹேக்கிங் செய்ய முடியும் என்கிற கருத்துக்கு பதிலாக தன்னுடைய ஆதார் எண்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். கூடவே முடிந்தால் ஹேக் செய்து பாருங்கள் என்று சவால் விட்டு இருந்தார். பின்னாளில் பிரான்சை சேர்ந்த எலியட் அவருடைய ஆதார் எண்களை வைத்து பிற விவரங்களை சேகரித்து ஷர்மாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அவரை மட்டுமல்ல, இந்தியாவில் ஆதாரின் பாதுகாப்பு தன்மை பற்றிய சந்தேகத்திலிருந்த, அனைவரையுமே ஏறக்குறைய அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த சம்பவம். இதைத்தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பிரபலமான மென்பொருள் நிறுவனங்களில் கூட இந்த பரிசோதனை முயற்சியைசெய்து பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் தற்போது.
அவ்வகையில் அண்மையில் மெக்-கஃபி என்னும் அமெரிக்கன் குளோபல் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஜான் மெக்-கஃபி இந்தியாவில் ஷர்மா செய்ததை போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தம் நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி நிபுணராகவும் தன் நிறுவனத்தின் பொருளாதார நிலவறை அறிஞராகவும் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி தன் நிறுவனத்தின் பொருளாதார நிலவறைக் கிடங்கினை (cryptocurrency wallet Bitfi) ஹேக் செய்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே ’பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ்’ என்கிற மென்பொருள் ஆய்வகத்திலிருந்த சிலர் அதனை ஹேக் செய்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்து டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
எந்த அளவிற்கு உலகம் முழுவதும் சைபர் செக்யூரிட்டியின் நிலை இருக்கிறது என்பதை உலகத்தார் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
#இன்னும் என்ன்னலாம் சோதனை வருமோ!
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Wife takes extreme step after techie suspects infidelity
- Techie calls sister and makes heartbreaking request before committing suicide
- Techie in trouble after leaking intimate videos
- "Police gave me second life," assaulted techie's emotional statement
- Indian IT may hire 1 lakh new techies
- Techie attack in Chennai: M K Stalin visits victim in hospital
- Bengaluru techie jumps off 5th floor of building, dies
- Andhra techie assault case: IPS officer visits techie in hospital
- Major update on techie attack in Chennai's IT corridor
- Heartbreaking! Indian techie dies in US