‘நாங்க ஜோக்கர் இல்ல.. உலகக்கோப்பையில தெரியும்?’.. பேபிசிட்டர் விளம்பரத்தால் கடுப்பான வீரர்!

Home > News Shots > தமிழ் news
By |

பழைய ஞாபகங்களை வைத்து உருவான பேபி சிட்டர் விளம்பர படம், தங்களை விமர்சித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர் மீது ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் .

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டியின் போது இரண்டு அணிகளுக்கிடையான சில மறக்க முடியாத நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வைரலாகின.

அதில் குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பண்டை, ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேபி சிட்டர் என்று கலாய்த்தார். உடனே பதிலுக்கு ரிஷப் பண்ட், பெய்னை டெம்பரவரி கேப்டன் என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு ரிஷப் பண்ட் ஒரு நிகழ்வில் டிம் பெய்னின் குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு இருக்குமாறு, டிம் பெய்னின் மனைவி போட்டோ எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அவர் சிறந்த பேபிசிட்டர்தான் போல என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து வரும் 24-ம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த சுற்றுப்பயணத்தை முன்னிட்டு விளம்பரப் படம் ஒன்றை எடுத்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது இரு கைகளிலும், ஆஸ்திரேலியா அணியின் ஜெர்சியை அணிந்த இரு குழந்தைகளை தூக்கியபடி நடித்துள்ளார்.

இந்த விளம்பர படத்தை பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், இப்படி ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலாக பார்க்காதீர்கள். உலக கோப்பை யாரிடம் இருக்கிறது என யோசியுங்கள் என்று கோபமாக ட்வீட் செய்துள்ளார்.

INDVAUS, CRICKET, ICC, BCCI, TEAMINDIA, VIRALVIDEOS, BABYSITTING

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES