மைனர் பையனுடன் ஓட்டம்.. திருமணமான 28 வயது பெண் போக்ஸோ சட்டத்தில் கைது!
Home > தமிழ் newsசென்னையில் திருமணமான 28 வயது பெண் ஒருவர், 17 வயது மைனர் பையனை பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டதால், பாக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வசந்தி, திருமணமாகி 3 குழந்தைகளான நிலையில் தனது கணவருடனான கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டாம் கணவர் பெங்களூரில் பணிபுரிந்து வருபவராக இருந்ததால், வசந்தி குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான், உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்ற வசந்தி, தன்னைப் போலவே இன்னொரு அட்டெண்டராக அதே வார்டுக்கு வந்திருந்த 17 வயது பையனை முதல் முறையாக பார்த்துள்ளார். அவருடன் வசந்திக்கு கண்டதும் காதல் உண்டாக, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி, ஊர் சுற்றத் தொடங்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் குழந்தைகளை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, கணவரையும் பிரிந்து, மைனர் பையனுடன் தப்பி ஓடி வெளியூரில் தங்கி தகாத காரியங்களில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் மகனை காணவில்லை என்று 17 வயது பையனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பாக்கம் இணை கமிஷ்னர் ராஜேந்திரனின் தலைமையில் போலீசார் தேடுதல் நடத்தி இருவரையும் பிடித்துள்ளனர். அந்த பையனை அறிவுரை சொல்லி பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மைனர் பையனை பாலியல் ரீதியான குற்றங்களுக்கு தன்னுடன் உட்படுத்தியதால் வசந்தியை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண் ஒருவர் மீது போக்ஸோ சட்டம் பாய்வதென்பது மிகவும் அரிது. முன்னதாக பெற்ற மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த தாய் ஒருவர் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இயற்கை விவசாயத்தின் காதலன் நெல் ஜெயராமன் மறைவு!
- Wow! Chatbot for women to fight against workplace harassment
- கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்த அம்மா.. புரியாமல் அழுத 3 வயது மகன்!
- HIV-யால் 30 நிமிடத்தில் பணிநீக்கம்: கோர்ட் உத்தரவால் 3 வருஷத்துக்கு பிறகு பெண் மகிழ்ச்சி!
- டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்!
- தாமரை மலர சூரிய சக்தி தேவையா? தேவையில்லையா?: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்!
- உன் 'சிம்மக்குரலில்' என்னை அழைக்க மாட்டாயா?.. வீடியோ உள்ளே!
- சினிமா பாணியில் 8 ஆயிரம் சிசுக்களை கருவிலேயே கொன்ற கும்பலை பொறிவைத்து பிடித்த போலீசார்!
- ’வெளியூர் சென்று குடிக்க இலவச பஸ் பாஸ் கேட்டு‘..கலெக்டரிடம் மனு கொடுத்த நபர்!
- தனியார் விடுதியின் குளியலறை,படுக்கையறையில் கேமராக்கள்.. ஆப் மூலம் கண்டுபிடித்த பெண்கள்!